'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
யு-டியூபில் இதுவரையில் சுமார் 25க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. அதில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், பிரபுதேவா ஆகியோரது பாடல்கள் தான் இடம் பிடித்துள்ளன.
சிம்பு நடித்த படங்களின் பாடல்களில் பல சூப்பர் ஹிட்டாக அமைந்திருந்தாலும் அவை எதுவுமே 100 மில்லியன் கிளப்பில் இணைந்ததில்லை. முதல் முறையாக 'ஈஸ்வரன்' படத்தில் இடம் பெற்ற 'மாங்கல்யம்' பாடல் தற்போது அந்த கிளப்பில் இணைந்துள்ளது.
தமன் இசையமைப்பில், யுகபாரதி எழுதி, சிலம்பரசன், ரோஷினி, தமன் ஆகியோர் பாடியுள்ள பாடல் இது. தெலுங்கில் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தமன் இசையமைத்துள்ள தமிழ்ப் பாடல் ஒன்று அந்த கிளப்பில் இணைவதும் இதுதான் முதல் முறை.
இந்த 'மாங்கல்யம்' வீடியோ பாடல் கடந்த ஜனவரி மாதம் தான் யு டியூபில் வெளியானது. ஐந்து மாதங்களுக்குள் 100 மில்லியன் பார்வைகளை சாதனையை நிகழ்த்தியுள்ளது.