வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகளை வாங்கி பென் மூவீஸ் நிறுவனம் மொழிவாரியாக சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் யாருக்கு விற்கப்பட்டுள்ளன என்பதை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமை ஜீ 5 நிறுவனத்திற்கும், ஹிந்தி உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் விற்கப்பட்டுள்ளது.
ஹிந்தி சாட்டிலைட் உரிமை ஜீ சினிமா, தெலுங்கு உரிமை ஸ்டார் மா, தமிழ் உரிமை ஸ்டார் விஜய், மலையாள உரிமை ஏசியா நெட்டி, கன்னட உரிமை ஸ்டார் ஸ்வர்ணா ஆகிய டிவிக்களிடம் விற்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், போர்ச்சுகீஸ், கொரியன், துர்க்கிஷ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் 525 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்றைய அறிவிப்பின் மூலம் 'ஆர்ஆர்ஆர்' படம் இந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, அந்நிய மொழிகளான ஆங்கிலம், போர்ச்சுகீஸ், கொரியன், துர்க்கிஷ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அவற்றோடு ஜப்பான், சீனா மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். இதன் மூலம் உலக அளவில் 12 மொழிகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகப் போகிறது.
ஒரு இந்தியத் திரைப்படம் அதுவும் தென்னிந்தியத் திரைப்படம் இத்தனை மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறை.