Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரதேசி ஹேர் ஸ்டைல்! அதர்வா ஆச்சர்யம்!!

29 நவ, 2012 - 12:46 IST
எழுத்தின் அளவு:

பரதேசி ஹேர் ஸ்டைலை பார்த்து ஆச்சர்யப்பட்டதாக அப்படத்தின் ஹீரோ நடிகர் அதர்வா கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பரதேசி ஹேர் ஸ்டைலுடன் நடமாடிக் கொண்டிருந்த அதர்வா, சூட்டிங் முடிந்த சூட்டோடு சூடாக, யூத் லுக்கிற்கு மாறியிருக்கிறார். பரதேசி படத்தில் அளிக்கப்பட்ட ஹேர் ஸ்டைல் தனக்கு ரொம்பவே ஆச்சர்யத்தை தந்ததாக கூறியிருக்கிறார் அதர்வா.

ஹேர் ஸ்டைல் குறித்து அதர்வா அளித்துள்ள பேட்டியில், பாலா சார் தன் படத்தில் நடிக்க கூப்பிடுறாருன்னு தெரிஞ்சதும் பயங்கர சந்தோஷமாகிட்டேன். எப்படியும் தலையில்தான் அவர் கை வைப்பார்னு தெரியும். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு இன்டர்நெட்டில் சர்ச் பண்ணி விதவிதமா ஹேர் ஸ்டைல்களை டவுன்லோடு பண்ணிட்டு போயிருந்தேன். ஆனால் இன்டர்நெட் டேட்டாவுலேயே இல்லாதளவுக்கு ஒரு ஹேர் ஸ்டைலை எனக்கு வச்சுவிட்டுட்டார் பாலா சார். அதுமட்டுமில்ல. சின்ன வயசுல அப்பாவோடு டீ எஸ்டேட்டை சுத்தி பார்க்க போயிருக்கேன். அப்பல்லாம் உயரமான மேட்டிலேர்ந்து குதிக்கணும்னு தோணும். ஆனா அப்பா அனுமதிக்க மாட்டார். இந்த படத்தில் கமிட் ஆகி சூட்டிங் போனதும் பாலா சார் சொன்னது, அந்த மேட்லேர்ந்து நீ குதிக்கணும் என்றுதான். எனக்கு சின்ன வயசு ஞாபகமெல்லாம் வந்து விட்டது, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)