ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு |
கோமாளி படம் ஜெயம்ரவிக்கு வெற்றியை கொடுத்தாலும் அவரது 25வது படமான பூமி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஓடிடி தளத்திற்கு விற்று தயாரிப்பாளர் தப்பித்துக் கொண்டாலும் விமர்சன ரீதியாக படம் உரிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் அவர் இயக்குனர் அஹமத் இயக்கும் ஜனகனமன படத்தில் நடிப்பதாக இருந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த படத்தின் கதை களம் நான்கைந்து வெளிநாடுகளில் நடப்பது போன்று உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக இன்னும் ஒரு வருடத்திற்காவது படப்படிப்புக்கு திட்டமிடப்படடிருக்கும் நாடுகளில் அனுமதி கிடைப்பது சிரமம் என்பதால் அஹமத் இயக்கத்திலேயே இன்னொரு கதையில், அதாவது தமிழ்நாட்டிலேயே படப்பிடிப்பு நடத்துகிற மாதிரியான கதை களம் கொண்ட படத்தில் நடிக்க ஜெயம் ரவி திட்டமிட்டிருக்கிறார்.
மீடியம் பட்ஜெட்டில் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒருவேளை தியேட்டர்கள் திறக்கப்படாவிட்டாலும் ஓடிடியில் வெளியிடும் வகையில் இந்த படம் தயாராக இருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரையில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரும்.
இதற்கிடையில் ஜெயம்ரவி நடித்து வரும் பொன்னியின் செல்வன் படமும் முடங்கி கிடப்பது குறிப்பிடத்தக்கது. அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் ஆகியோரிடம் கதை கேட்டு ஓகே சொல்லி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.