சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வாலின் திருமணம் முடிந்த மறுநாள், நடிகை அனுஷ்கா, காஜலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “இந்த பூமியில் அதிகபட்ச மகிழ்ச்சி என்பது திருமணத்தின் மகிழ்ச்சிதான். இரண்டு மனங்கள் ஒரே எண்ணங்களுடன், இரண்டு இதயங்கள் ஒரே அசைவுடன்... காஜல், கவுதம் இருவருக்கும் மகிழ்ச்சியான திருமண நல்வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த திருமண வாழ்த்திற்கு சுமார் ஆறு மாத காலம் கழித்து 'ஹார்ட்டின்' மட்டும் பதிவிட்டு பதிலளித்துள்ளார் காஜல். “குழந்தை பெற்ற பிறகு எதற்குப் பதிலளிக்க வேண்டும்,” என ஒரு ரசிகர் அதற்கு கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.
அனுஷ்காவின் டுவீட்டை இப்போது தான் காஜல் அகர்வால் பார்த்துள்ளாரா அல்லது பதிலளிக்க மறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், எந்த கமெண்ட்டுகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. காஜலின் பதிலுக்கும் அனுஷ்கா வேறு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.