எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை | சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா |
கொரோனா ஊரடங்கின் இரண்டாம் அலை விஸ்வரூபமெடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்பதே இல்லாமல் இருக்கிறது. கடந்த வருடம் கொரோனா தாக்கத்தின் போது ஓடிடி தளங்கள் அவர்களுக்கு அதிகம் அறிமுகமாகின. பார்க்காத படங்களையும் கடந்த வருட ஊரடங்கின் போது பார்த்துத் தள்ளிவிட்டார்கள்.
ஆனால், இந்த வருடத்திய ஊரடங்கில் அவர்களால் புதிய படங்களைப் பார்க்க முடியவில்லை. வேறு மொழிகளில் வந்து சில படங்களை மட்டும் ஓடிடி தளங்களில் தீவிர சினிமா ரசிகர்கள் சிலர் பார்த்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களை இந்த வருடம் ஓடிடி தளங்கள் இன்னும் கண்டுகொள்ளவே இல்லை.
இந்த இரண்டாவது அலையின் தாக்கம் திடீரென வந்ததால் அவர்களால் சுதாரித்துக் கொள்ளவும் வாய்ப்பில்லை. இப்போதுதான் பல நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். அவை முடிந்து ஒப்பந்தம் போட்டு, அதன்பின்தான் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக வேண்டும்.
எப்படியும் ஜுன் மாதத்தில் சில புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக ஜுன் மாதம் வரையில் தான் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அப்படியே இருந்தாலும் தியேட்டர்களைத் திறக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் புதிய படங்களை வெளியிட்டால்தான் ஓடிடி தளங்களும் தாக்குப் பிடிக்க முடியும் என்பது உண்மை.