ஜூனியர் என்டிஆர் படத்திற்கு ஹாலிவுட் கிராபிக்ஸ் நிபுணர் | 'ஆதி புருஷ்' வெற்றிக்கு வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு | இந்து கடவுள் அவமதிப்பு: டாப்ஸி மீது போலீசில் புகார் | தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு | தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா 50 லட்சம் நன்கொடை | ஹுசைன் மீது எப்படி காதல் வந்தது? மணிமேகலையின் லவ் ஸ்டோரி | பிக்பாஸ் அபிநய் மனைவி அபர்ணா மீது லட்ச கணக்கில் மோசடி புகார் | கோலாகலமாக நடந்த வளைகாப்பு : மகிழ்ச்சியில் கண்மணி - நவீன் | விஜய் - வெற்றிமாறன் கூட்டணி உறுதி | சிவகார்த்திகேயன் - ஞானவேல் ராஜா வழக்கில் திடீர் திருப்பம் |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் கடந்த வருடமே ஒப்புக்கொண்ட படங்கள் கைவசம் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கதைகேட்டு உடனே ஒப்புக்கொண்ட படம் 'ஜனகனமன'. அதுமட்டுமல்ல, அந்தப்படத்தின் படப்பிடிப்பும் கடந்த நவம்பரிலேயே ஆரம்பிக்கப்பட்டு அதில் நடித்தும் முடித்து விட்டார் பிரித்விராஜ். தேசிய விருது பெற்ற காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, ட்ரைவிங் லைசென்ஸ் படத்தை தொடர்ந்து பிரித்விராஜூடன் இணைந்து இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தப்படத்தின் இரண்டரை நிமிட புரோமோவை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ்காரரான பிரித்விராஜை உயர் போலீஸ் அதிகாரியான சுராஜ் வெஞ்சாரமூடு விசாரணை செய்யும் இரண்டரை நிமிட காட்சியையும் புரோமோவாக வெளியிட்டுள்ளனர். பிரித்விராஜின் சமீபத்திய படங்களான ட்ரைவிங் லைசென்ஸ், அய்யப்பனும் கோஷியும் படங்களை போல இந்தப்படமும் இருவருக்கான ஈகோ யுத்தத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது போன்றே தெரிகிறது.