சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

சென்னை : ‛‛சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கலைஞர்கள் நன்கொடை தருவதை காட்டிலும் வாழ்நாளில் 10 நாள் கால்ஷீட் தர வேண்டும்,'' என, பெப்சி தலைவர் செல்வமணி கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கும், திரைத்துறை கலைஞர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் பெப்சியின் கோரிக்கை குறித்து அதன் தலைவர் செல்வமணி பேட்டி:
கொரோனா பரவலால், படப்பிடிப்பில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. படப்பிடிப்புக்கு சென்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அவரால் அவரது குடும்பத்தினர் பாதிக்கின்றனர். ஒரு உறுப்பினரின் பெற்றோர் கொரோனா பாதித்து இறந்து விட்டனர். கடந்த வாரம் சின்னத்திரை படப்பிடிப்பில் பரிசோதனை செய்ததில், 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பாதித்தவர்களுக்கு உதவி கேட்டால், அடுத்த தயாரிப்பாளரை கைகாட்டி, தட்டிக் கழிக்கின்றனர். கடந்த வாரம் தமிழக முதல்வரை சந்தித்த போது, படப்பிடிப்புக்கு அனுமதி வேண்டுதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழங்கினோம். அதில், அனுமதி கோரிக்கையை வாபஸ் பெறுகிறோம். மே இறுதி வரை படப்பிடிப்புகள் மற்றும் பிந்தைய பணிகள் அனைத்திலும் ஈடுபடுவதில்லை என முடிவு எடுத்துள்ளோம்.
கடந்த முறை போலவே இம்முறையும் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு அதிகமுள்ளது. நன்கொடை மூலம் மட்டுமே காப்பாற்ற இயலாது. பல்வேறு கலைஞர்கள் இணைந்து பூமிகா அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் திரைத்துறை தொழிலாளர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்குவதாக அறிவித்து கடந்த இரண்டு மாதமாக நிதியுதவி வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலைஞர்களை ஒருங்கிணைத்து படத்தயாரிப்பின் மூலம் திரைத்துறையையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்ற முடியும். கலைஞர்கள் வழங்கும் நன்கொடையை காட்டிலும், வாழ்நாளில் 10 நாள் கால்ஷீட்டை திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஒதுக்கினால் பெரிய உதவியாக இருக்கும். கொரோனா முதல் அலையின் போது நடிகர் அஜித் 25 லட்ச ரூபாய் வழங்கினார். தற்போது பெப்சிக்கு 10லட்ச ரூபாய் வழங்கியுள்ளார் அவருக்கு நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




