வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் அஜித் ரூ.10 லட்சம், பெப்சி அமைப்புக்கு நிதியாக வழங்கி உள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா தொழிலில் இருப்பவர்களும் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் பல திரைப்பிரபலங்கள் பெப்சி அமைப்புக்கு நிதி வழங்கினர். மேலும் உணவுப்பொருட்களையும் வழங்கினர். அதை முறையாக பிரித்து, பெப்சியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்தார் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி.
அதேப்போல் இந்த முறையும் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ ஏற்பாடுகளை செய்து வருகிறார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இந்நிலையில் பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவ ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார் நடிகர் அஜித் குமார். கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நேற்று ரூ.25 லட்சம் நிதி வழங்கி உள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.