கொரோனாவுக்கு திரைப்பிரபலங்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வட சென்னை, பிகில் உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி. தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். கடந்த சில நாட்களாகவே கொரோனா அறிகுறிகளுடன் இருந்த இவர் இப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.