ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
2020ம் ஆண்டு கொரோனா முதல் அலை பரவிய உடனேயே தியேட்டர்கள் மூடப்பட்டன. பொழுதுபோக்கிற்கு ஏங்கித் தவித்த மக்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு வடிகாலாக அமைந்தன. பழைய படங்களைத் திரும்பவும் பார்த்த மக்களுக்கு புதிய படங்களையே நேரடியாக தங்கள் தளங்களில் வெளியிட வைத்து ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தன ஓடிடி நிறுவனங்கள்.
கடந்த வருடம் மட்டும் 20க்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடியில் வெளிவந்தன. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் மூன்று வார காலமாகியும் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் நேரடியாக வெளியாகவில்லை.
ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்திலும் தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதற்காக பல படங்களை திட்டமிட்டிருந்தார்கள். இப்படி இரண்டாவது அலை வந்து தாக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. தியேட்டர்கள் வெளியீடு என்பதை வைத்துத்தான் சாட்டிலைட் டிவி மற்றும் ஓடிடி வெளியீடு ஒப்பந்தங்களை பல தயாரிப்பாளர்கள் போட்டுள்ளார்கள்.
திடீரென ஓடிடியில் நேரடி வெளியீடு என்றால் ஏற்கெனவே போட்ட ஒப்பந்தங்களை மாற்ற வேண்டும். அதில் சில பல சிக்கல்கள் இருப்பதால்தான் ஓடிடி தளங்களில் கடந்த மூன்று வார காலமாக நேரடியாக எந்தப் படமும் வெளியாகவில்லை என்கிறார்கள்.
பல படங்கள் அவர்களது ஒப்பந்தங்களை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களாம். தியேட்டர்களைத் திறக்க எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும் என்பதுதான் தற்போதைய நிலைமை. ஜுன் மாதத்திலிருந்து சில பல புதிய படங்களின் நேரடி வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளிவரும் எனத் தெரிவிக்கிறார்கள்.