ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோன பெருந்தொற்றால் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். கொரோன தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் வேகத்தை குறைக்க ரெம்டெசிவிர் என்ற மருந்து போடப்படுகிறது. இதனால் இந்த மருந்தை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளில் திரள்கிறார்கள். தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் பல ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டரில் "எனது நண்பர் ஒருவரின் தந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. முடிந்தவர்கள் உதவுங்கள்" என்று கேட்டிருந்தார்.
ஐஸ்வர்யாவின் கோரிக்கையை ஏற்ற ரசிகர் ஒருவர் அவரது நண்பருக்கு ரெம்டெசிவர் மருந்து அனுப்பி உள்ளார். இதை குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் "ரெம்டெசிவிர் மருந்து கிடைத்து விட்டது. உதவிய உள்ளங்களுக்கு நன்றி" என்று டுவிட்டரில் கூறியிருக்கிறார்.