லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. செம்மரக் கடத்தல் பற்றிய கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள காடுகளில் நடைபெற்றது. தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இப்படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது என செய்திகள் வெளிவந்தன. ஆனால், படக்குழுவினரிடம் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.
“புஷ்பா' கதையில் பலவிதமான காலகட்டங்கள் உள்ளன. இரண்டரை மணி நேரத்தில் மொத்த கதையையும் சுருக்குவது இயலாத விஷயம். அதனால், நாங்களும், இயக்குனர், நாயகன் இணைந்து பேசி படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாம் பாகத்தை ஆரம்பிப்போம். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் 10 சதவீதம் முடித்துவிட்டோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
நவராத்திரியின் போது முதல் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தை அடுத்த வருட கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.




