மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | என்னை சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்திகோங்க : விஜய் சேதுபதி | ஒரு மாதமாக காதல்... 4 மாதத்தில் திருமணம் : விஷால் சொல்கிறார் | பிளாஷ்பேக்: ஆட்டோ சங்கரை உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமான காட்சிகள் நீக்கம் | நடிகையின் நகைகளை திருடியவர் கைது: ரூ.23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு | சந்தானம் பட வழக்கு முடித்து வைப்பு |
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார். இந்தப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தநிலையில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக தமிழ் திரையுலகில் நுழைகிறார்.
மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவந்த ஷைன் டாம் சாக்கோ, இதிகாசா என்கிற வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். வாய்ப்புகள் நன்றாக தேடிவந்த சமயத்தில் போதைபொருள் பயன்படுத்தியதாக கைதாகி சிறைக்கு சென்றார். அதன்பின் ஜாமீனில் வெளிவந்த இவர், தற்போது நல்ல பிள்ளையாக, நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் சாக்கோ.