அர்ச்சனா ரோல் மாடல் அர்ச்சனா | மாமன் படத்தில் கவுரவ வேடத்தில் விமல் | தமிழுக்கு வரும் துணை முதல்வர் படம் | டூரிஸ்ட் பேமிலி-யை பாராட்டிய ரஜினி : பொக்கிஷ பட்டயம் என சசிகுமார் நெகிழ்ச்சி | கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நமது சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஜார்ஜியா நாட்டில் ஆரம்பமானது.
விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு 25 நாட்கள் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டதற்கு முன்பாகவே குழுவினர் சென்னை திரும்பினர். வந்தபின் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்.
இந்த வாரத்தில் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக பிரம்மாண்ட ஷாப்பில் மால் அரங்கமும் தயாராகி வந்ததாம். ஆனால், கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம் என விஜய் தெரிவித்தாராம். மேலும், அரங்கம் அமைக்கும் பணியாளர்களின் நலனைக் கருதியும் அந்த வேலையையும் நிறுத்தச் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கொரோனா தாக்கம் குறைந்து எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்க முடிவெடுக்கிறோமோ அதற்கு முன்பு மீண்டும் அந்தப் பணிகளைத் துவக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.