ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | பிளாஷ்பேக்: மகனுக்காக இயக்குனராக மாறிய நாகேஷ் | பிளாஷ்பேக்: தமிழ் திரைப்படமான ஆங்கில நாடகம் | இந்த உலகில் யாரும் சுயமாக உருவாக்கப்படுவது இல்லை : சல்மான் கான் பேட்டி | அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் |
பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக்(78), கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தார்.
1943ம் ஆண்டு ஏப்., 5ம் தேதி பிறந்த இவர், சினிமா மீது கொண்ட ஈர்ப்பால் நடிகர் மேஜர் சுந்தரராஜனின் நாடக்குழுவில் சேர்ந்து நடித்து வந்தார். மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் நடிகர் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடிப்பில் 1981ம் ஆண்டு வெளியான படம் ‛கல்தூண். இதில் சிவாஜியின் மகனாக நடித்தார் திலக். இப்படம் தந்த புகழால் ‛கல்தூண் திலக் என பின்னர் அழைக்கப்பட்டார்.
ஆனால் இப்படத்திற்கு முன்பே, ‛‛பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வேலை கிடைச்சிருச்சு, வெள்ளிக்கிழமை விரதம் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் கல்தூண் படம் தான் இவருக்கு நல்ல அடையாளம் தந்தது. கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ள இவர் பெரும்பாலும் வில்லத்தனம் கலந்த வேடங்களிலேயே நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சின்னத்திரை சீரியல்களிலும், டிவி ஒன்றில் பழைய பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கி வந்தார். மேலும் ஏவிஎம் ஸ்டுடியோவில் சில ஆண்டுகள் உதவி எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த இவர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி இன்று(மே 7) உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழ் சினிமாவில் பலர் மறைந்து வருகின்றனர். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.