ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
ஒளிப்பதிவாளரும், பிரபல இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல் இரங்கல்
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த், தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி''. என பதிவிட்டுள்ளார்.
ரஜினி இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், ‛‛மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்'' என பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் வெளியிட்ட இரங்கல் செய்தி : இன்றைய காலை பொழுது என்னை நடுங்க வைத்தது. ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய காதல் தேசம் படம் தான் அவருக்கு ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுக படம். துடிப்பான, தொழில் பக்தியுள்ள அந்த இளைஞர் பிற்காலத்தில் பெரிய அளவில் இந்திய சினிமாவில் புகழ் பெறுவார் என்று அன்றே நான் கணித்து சொன்னேன். நீங்கள் இவ்வளவு வேகமாக விடை பெற்றிருக்க கூடாது. மிகவும் வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்... ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்''.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். கனா கண்டேன். அயன், கோ, காப்பான், மாற்றான், அனேகன், கவன் ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கியவர். அதிகம் பேசாமல் தன் படங்களை மட்டுமே பேசவைத்தவர். தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்தவர். நண்பர்கள் வட்டாரம் இவருக்கு பெரியது. தமிழ் சினிமாவை ஆங்கிலப்படங்களுக்கு நிகராக கொண்டு செல்லும் இயக்குனர்களில் இவரின் பங்கு அதிகம் என்றால் அது மிக இல்லை என்றே அனைவரும் சொல்வார்கள். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தாருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.