''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இன்றைய மீம் கிரியேட்டர்கள் பலருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கும் ஒரே நடிகர் வடிவேலு தான். அவர் நடித்த படங்களில் இருந்துதான் பல புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை வைத்து பல்வேறு மீம்ஸ்களை ரசிக்கும் வகையில் உருவாக்கி வருகிறார்கள்.
வடிவேலு நடித்து கடைசியாக 2017ல் 'மெர்சல்' படம் வெளிவந்தது. கடந்த நான்கு வருடங்களாக அவர் நடித்த படங்கள் வரவேயில்லை. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' என்ற படத்தை 2017 ஆகஸ்ட் மாதம் அறிவித்து ஆரம்ப கட்டப் படப்பிடிப்பையும் நடத்தினார்கள்.
அதன்பின் வடிவேலு, படத்தை இயக்கிய சிம்புதேவன், தயாரிப்பாளர் ஷங்கர் ஆகியோருக்கிடையே 'படைப்பு வித்தியாசம்' ஏற்பட்டது. வடிவேலு சிலவற்றைக் கேட்க அதை சிம்புதேவனும், ஷங்கரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் பெரிதாக வெடித்து படம் அப்படியே நின்று போனது. படத்திலிருந்து வடிவேலு விலகிக் கொண்டார்.
ஆனால், அப்போது வடிவேலுவால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டது என தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு வடிவேலு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதபடி ஷங்கர் ஒரு தடையை உருவாக்கினார் என திரையுலகத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். 'ரெட்' என்பதையெல்லாம் கடந்த சில வருடங்களாக அதிகாரப்பூர்வமாக எந்த திரையுலக சங்கமும் அறிவிப்பதில்லை. அவர்களுக்குள் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு ஒரு தடையை உருவாக்கிவிடுவார்களாம்.
தற்போது 'இந்தியன் 2' பட விவகாரத்திலும் இயக்குனர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் இடையே விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
ஒரு தயாரிப்பாளராக ஷங்கர் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் தன்னுடைய பிரச்சினையை அணுகியதற்கும், தற்போது 'இந்தியன் 2' விவகாரத்தில் இயக்குனராக அவர் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது கோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் தான் ஒரு படம் உருவாவதற்கான முதன்மை முதலீட்டாளர்கள் என்பதை இயக்குனர்களும், நடிகர்களும் மறந்துவிடுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
சில பல கோடிகளை தயாரிப்பாளர்களாக இழந்ததற்கு மிகவும் வருத்தப்பட்ட ஷங்கர், 'இந்தியன் 2' படத் தயாரிப்பாளர் 200 கோடி வரை செலவிட்டது பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.