'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ராட்சத மனித குரங்கை மையமாக வைத்து ஹாலிவுட்டில் கிங்காங் படம் வெளியானது. அதே பாணியில் தற்போது தமிழில் கபி என்ற படம் உருவாகிறது.
முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் உருவாகும் படம் இது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி இராமசாமி தயாரிக்கிறார். அரவிந்தசிங் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு கவுசிக்கரா மற்றும் என். இராமசாமி இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளனர்.
இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் அதிகமான கம்ப்யூட்டர் நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரிக்கிறார். படம் பற்றிய பர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.