இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா |
சின்னத்திரை நடிகராக இருந்த கவின், பிக்பாஸ் நிழ்ச்சி மூலம் பிரபலமானார். இப்போது ‛லிப்ட்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக, அமிர்தா ஐயர் நடிக்க, இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இந்த படத்தை வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நிஷாந்தின் பாடல் வரிக்கு, பிரிட்டோ மைக்கேல் இசையில் இன்னா மயிலு.. என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார். இவருடன் குழந்தை நட்சத்திரம் பூவையாரும் பாடி உள்ளார். தற்போது இந்த பாடலை வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலை பற்றி தயாரிப்பாளர் ஹேப்ஸி பேசுகையில், இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலின் துள்ளலான மெட்டுக்கு, நிஷாந்த் எழுதிய இளமை ததும்பும் பாடல் வரிகளை, தன் மாயாஜால குரலால் அற்புதமாக பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் முகவரியாக அமைந்திருக்கும் இன்னா மயிலு.. என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாட சம்மதித்ததும், படக்குழுவினருக்கு உற்சாகம் பீறிட்டது. இந்த பாடலுக்கான பதிவின்போது அவர் வருகை தந்து, எங்களுக்குள் இருந்த பதற்றத்தை தணித்து, சூழலை இனிமையானதாக்கி, எளிதாகவும், மிக நேர்த்தியாகவும் அந்தப் பாடலை பாடினார். வசீகரமான அவரின் குரலில் இந்த பாடல் வரிகளை கேட்டபோது ரசிகர்களின் ஆனந்த மனநிலையில் நான் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தோம். இன்னா மயிலு.. என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயனுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.