'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள படம் தலைவி. ஜெ.வாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ள இப்படம் தமிழ், ஹிந்தியில் தயாராகியுள்ளது. அதோடு மலையாளம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளன.
இப்படத்தை ஏப்ரல் 23-ந்தேதி வெளியாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மும்பையில் ஊரடங்கு, தமிழகத்தில் தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் அனுமதி போன்ற காரணங்களால் தலைவி ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.
இந்த நேரத்தில் தலைவி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாராகி விட்டதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அந்த செய்தியை தற்போது தலைவி படக்குழு மறுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தலைவி படத்தின் தமிழ்ப்பதிப்பை அமேசானிலும், ஹிந்தி பதிப்பை நெட்பிளிக்சிலும் வெளியிட திட்டமிட்டிருப்பது உண்மைதான். ஆனால் முதலில் தியேட்டர்களில் தான் தலைவி வெளியாகும். அதன்பிறகு தான் ஓடிடி தளங்களில் வெளியிடுவோம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.