லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா பாசிடிவ் என்பது உறுதியானது. இதனால் தனக்கும் ஒருவேளை கொரோனா பாதிப்பு இருக்கலாமோ என தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் பவன் கல்யாண். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் மருத்துவ அறை ஒன்றில் ஓய்வெடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது. அதேசமயம் அடுத்த சில தினங்களில் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சி சார்பில் அறிக்கை வெளியானது.
இந்நிலையில் பவன் கல்யாண் குறித்து எப்போதும் சர்ச்சை கருத்துக்களையே கூறிவரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.. இதெல்லாம் ஒரு ட்ராமா என கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ராம்கோபால் வர்மா, “இந்த புகைப்படத்தில் எது போலியாக இருக்கிறது என எனக்கு தெரியப்படுத்துங்கள்.. சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு நான் பரிசு தருவேன்” என கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் ராஜமவுலிக்கு ஒரு வேண்டுகோள் வைக்கும் விதமாக, “இந்த ஆர்ட் டைரக்சன் அமைப்பில் ஏதோ தவறாக தெரிகிறது. ராஜமவுலி சார், தயவு செய்து உங்க ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலிடம் கேட்டு, எனக்கு சொல்லுங்களேன்” என்றும் கூறியுள்ளார்.