Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நலமாக இருக்கிறேன் : விவேக் ஓபராய் விளக்கம்

17 ஏப், 2021 - 16:03 IST
எழுத்தின் அளவு:
I-am-fine-says-actor-Vivek-oberoi

அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்தவர் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய். இவரது அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இன்று மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில வட இந்திய ஊடகங்களில் விவேக்கிற்குப் பதிலாக விவேக் ஓபராய் பெயரைக் குறிப்பிட்டு தவறாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதற்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் விவேக் ஓபராய் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளார். “சென்னையில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், நான் மும்பையில் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன். ஆனாலும், தமிழ் திரையுலகத்தின் நடிகர் விவேக் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன்விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ... ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in