பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தி மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் இதன் இரண்டாம் பாகமான 'திரிஷ்யம் 2' வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தெலுங்கில் திரிஷ்யம் ரீமேக்கில் நடித்த வெங்கடேஷ், உடனடியாக திரிஷ்யம் இரண்டாம் பாகத்தை துவங்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கன்னடத்திலும் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யா-2 என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் இணைந்து பணியாற்றிய இயக்குனர் பி.வாசு மற்றும் நடிகர் ரவிச்சந்திரன் கூட்டணி இந்தப் படத்திலும் அப்படியே தொடர்கிறது. முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த, நவ்யா நாயர், பிரபு, ஆஷா சரத் ஆகியோரும் இந்த படத்தில் இடம் பெறுகின்றனர்