பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது |

பத்து வருடங்களுக்கு முன்பு எங்கேயும் எப்போதும் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ராஜாராணி, மான் கராத்தே என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வந்தார். இடையில் சில காலம் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட் என்பவருடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.
இதற்கான முன் கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை யார் இயக்குகிறார், யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த படத்திற்கு 1947 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக இது சுதந்திர போராட்டத்தை மையப்படுத்திய வரலாற்று படமாகவோ அல்லது அதன் பின்னணியில் சமகாலத்தில் உருவாகும் சமூக படமாகவோ இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உருவாக உள்ளது.