பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் |
படையப்பா, பாகுபலி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ரம்யா கிருஷ்ணனின் திறமைக்கு தீனி போடும் வகையில் தற்போது தெலுங்கில் ரிபப்ளிக் என்ற அரசியல் படம் கிடைத்திருக்கிறது. சாய்தேஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பிரஸ்தனம் என்ற படத்தை இயக்கிய தேவ் கட்டா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் விசாக வாணி என்ற ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். அதாவது, சரியோ தவறோ சக்தி மட்டும் நிலையானது என்று நம்பக்கூடிய ஒரு அதிரடியான அரசியல்வாதியாக நடிக்கிறார் ரம்யாகிருஷ்ணன். இப்படம் 2021 குடியரசு தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ரம்யாகிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக்கை கலை ஓவிய வடிவில் படக்குழு வெளியிட்டுள்ளது.