ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகர் ரஜினியின் 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 2020 ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட உள்ளதாக பிரகாஷ் ஜவடேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இந்திய சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்திற்கு 2020 ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல வகைகளில் தனது பங்களிப்பை அளித்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாயம் பூசாதீர்கள்
தமிழக தேர்தலை மனதில் வைத்து விருது கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, இது, திரையுலகம் தொடர்பான, 50 ஆண்டுகளாக உழைக்கும் ஒருவருக்கு கொடுக்கும் விருது. இதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள், என, பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். வரும், மே 3ம் தேதி, சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா டில்லியில் நடக்கிறது. அதில், ரஜினிக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
விருது வரலாறு
இந்திய திரையுலகின் முதல் திரைப்படம், ராஜா ஹரிச்சந்திரா. இதை இயக்கியவர், பால்கே; இந்திய திரைப்பட உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது நினைவாக, 1969 முதல், தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வென்றவர்களுக்கு, தங்கத் தாமரை பதக்கம், பொன்னாடை, 10 லட்சம் ரூபாய் பரிசு ஆகியவை வழங்கப்படுகிறது.
இதற்கு முன் விருது பெற்றவர்களில் சிலர்
1969 தேவிகா ராணி, நடிகை -- ஹிந்தி
1982 எல்.வி.பிரசாத், தயாரிப்பாளர் - தெலுங்கு, தமிழ், ஹிந்தி
1984 சத்ய ஜித்ரே, இயக்குனர் - வங்காளம்
1989 லதா மங்கேஷ்கர், பாடகி - ஹிந்தி மராத்தி
1992 புபென் ஹசாரிகா பாடகர் - அசாம்
1994 திலீப் குமார், நடிகர் - ஹிந்தி
1995 ராஜ்குமார், நடிகர் - கன்னடம்
1996 சிவாஜி, நடிகர் - தமிழ்
2004 ஆடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குனர் - மலையாளம்
2010 பாலசந்தர், இயக்குனர் - தமிழ்2018 அமிதாப் பச்சன், நடிகர் - ஹிந்தி
2019 ரஜினி, நடிகர் - தமிழ்
விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் இருந்து திரைக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.