சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தனுஷின் படங்களுக்கு என கேரளாவில் தனி மார்க்கெட் இருக்கிறது. அது அசுரன் வெற்றி மூலம் இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. சமீபத்தில் அசுரன் படத்திற்கும், சிறந்த நடிகராக தனுஷுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆசுரனை போலவே, ஏப்-9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் அவரது கர்ணன் படத்திற்கும் கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்தப்படத்தில் மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் மலையாளத்தில் பிரபலமானவர்கள்.
இந்தப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான, மோகன்லாலுக்கு சொந்தமான ஆசீர்வாத் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. கடந்தமுறை அசுரன் படத்தை கூட மோகன்லாலின் மேக்ஸ்லேப் நிறுவனம் தான் வெளியிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுக்கும் தாணு தான் தயாரிப்பாளர் என்பதாலும் அசுரன் மூலம் இருவருமே நல்ல லாபம் பார்த்தனர் என்பதாலும் எந்தவித பரபரப்பும் இன்றி இந்த படத்தின் வியாபாரம் மோகன்லால் நிறுவனத்திற்கு சென்றுள்ளது.