பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது |

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இவர்கள் மூவரும் சேர்ந்துள்ள படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. பிரமாண்டமான ஆக்ஷன் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது நிறைவடைந்த பின்னர் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். வலிமை அப்டேட் கேட்டு அவர்கள் பலரையும் தொந்தரவு செய்தது சர்ச்சையானது. இதையடுத்து அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி அப்டேட் வெளியாகும் போனி கபூர் அறிவித்ததால் அஜித் ரசிகர்கள் சற்று அமைதியாகினர்.
இந்நிலையில் வலிமை குறித்த புதிய அப்டேட் ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில், "வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்", என அவர் குறிப்பிட்டுள்ளார். படம் நிறைவடையும் முன்பே திரையரங்கு உரிமை வியாபாரமாகிவிட்டதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.