ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தாக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சுழன்றடித்த நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையும் வீச துவங்கியுள்ளது. அதேசமயம் தற்போது கொரோனா தொற்றை தவிர்க்க தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆமீர்கான், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கும் கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகியுள்ளது. இவர் தான் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால் சில வாரங்களுக்கு முன்னர் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பரேஷ் ராவல். ஆனால் அதையும் மீறி கொரோனா தொற்றால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தகவலை தானே வெளியிட்டுள்ள பரேஷ் ராவல், கடந்த பத்து நாட்களாக தன்னை சந்தித்து சென்றவர்கள், தங்களை ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.