ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற போது கிரேன் விபத்து ஏற்பட்டு மூவர் இறந்தனர். அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தொடர்ந்து கொரோனா தாக்கத்தால் நின்றது.
மற்ற படங்களின் படப்பிடிப்பு தளர்வுகளக்குப் பிறகு ஆரம்பமானாலும் இப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் மீண்டும் ஆரம்பமாகாமல் உள்ளது. தயாரிப்பு நிறுவனம், ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோருக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் ஒரு தகவல். இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பும், இப்படத்திற்காக சுமார் 150 கோடி ரூபாய் செலவு செய்துவிட்டார்களாம், மேலும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு இருக்கிறது என்கிறார்கள்.
கமல்ஹாசன் தற்போது தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தேர்தல் முடிந்த பின்பும் அவர் இப்படத்தின் படப்பிடிப்புக்கு வருவாரா அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள 'விக்ரம்' படப்பிடிப்புக்குச் செல்வாரா என்பது குறித்து தெரியாமல் உள்ளது. ஷங்கரும் ராம் சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார்.
ஏற்கெனவே கமல்ஹாசன் நடிக்க 'சபாஷ் நாயுடு' என்ற படத்தைத் தயாரித்து பல கோடிகளைச் செலவு செய்த லைக்கா நிறுவனம் அப்படத்தைத் தொடரவேயில்லை. இப்போது 'இந்தியன் 2' படத்திற்கு இவ்வளவு செலவு செய்துவிட்ட நிலையில் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது உறுதியாகமலே இருக்கிறது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள பல கலைஞர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். கொரோனா தொற்று காரணமாக அவர்களால் இங்கு வந்து கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தள்ளிப் போகிறது என படத்தின் நாயகி காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்த பிறகே இப்படத்தின் உண்மை நிலை என்னவென்பது தெரிய வரும் என்கிறார்கள்.