திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் | லண்டனில் 1540 கிலோமீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்த ஆர்யா | பிரமாண்டமாக நடைபெறும் வெந்து தணிந்தது காடு இசை வெளியீடு | 'ஜகமே தந்திரம்' பற்றி 'கிரே மேன்' இயக்குனர்கள் கருத்து | ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா | சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா |
பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராமவுலி இயக்கதில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர் (ரத்தம் ரணம் ரவுத்திரம்). இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கினால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் இந்தி என பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரது கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் வீடியோ ஆகியவை ஏற்கெனவே வெளியாகின. இதில் ஜூனியர் என்.டி.ஆரின் பர்ஸ்ட் லுக் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஆலியாபட்டுக்கு நேற்றுமுன்தினம் பிறந்த நாள். இதை முன்னிட்டு அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் அவர் சீதை என்ற வேடத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்டத்தை தழுவி உருவாகும் இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. உலகமெங்கும் அக்டோபர் 13ம் தேதி படம் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.