‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

ரேணிகுண்டா படத்தில் குணசித்ர நடிகையாக அறிமுகமானர் சஞ்சனா சிங். அதன்பிறகு காதல் பாதை, அஞ்சான், மீகாமன், தனி ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடினார்.
இந்த நிலையில் சஞ்சனா தனது கவனத்தை ஓட்டல் தொழிலை நோக்கித் திருப்பியுள்ளார். யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை வடபழனியில் தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழாவில் இயக்குநர் கே பாக்கியராஜ், சோனியா அகர்வால், மதுமிதா, நடிகர் பரணி, சம்பத், மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் ராதிகா, ஆடை வடிவமைப்பாளர் சிட்னி கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சஞ்சனா சிங் கூறியதாவது: இந்த கொரோனா காலகட்டத்தில் தான் உணவின் தேவையை உணர்ந்தேன். நான் மட்டுமல்ல, உலகமே உணர்ந்தது. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாம் ஏதாவது இன்னொரு தொழிலையும் வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினேன். நம்மில் பலர் சினிமா மட்டுமே என இயங்கி வாய்ப்புகள் இல்லாதபோது திணறிவிடுகிறோம். இந்த சினிமாவில் தைரியமாக பாதுகாப்பாக இயங்க, இன்னுமொரு நிரந்தர வருமானமுள்ள தொழிலை கைவசம் வைத்துக் கொள்வது நல்லது என நினைத்தே இந்த யம்மியோஷா திட்டத்தை தொடங்கினேன். நடிப்பில் முழுக்கவனம் செலுத்தும் அதேவேளையில் இந்த யம்மியோஷாவையும் சிறப்புற நடத்த முனைவேன். அதற்கான உழைப்பு என்னிடம் இருக்கிறது. என்றார்.