இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் | மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் |
சினிமா நடிகர்கள், நடிகைகள் சினிமாவை விட்டு டிவி பக்கம் வந்தால் அவர்களுக்கு மார்க்கெட் போய்விட்டது என்று சொன்ன காலம் ஒன்று உண்டு. சந்தானம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றதும் அப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் போய்விட்டது.
மேலும், சில முன்னணி நடிகர்களே டிவி நிகழ்ச்சிகளை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருவதால் சினிமா, டிவி என பிரித்துப் பார்த்த இமேஜ் எல்லாம் மலையேறிவிட்டது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க அவருக்கு சினிமாவில் நடிப்பது போன்ற சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை.
நடிகர் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சி பெரிய அளவில் புகழடையவில்லை. இப்போது மீண்டும் டிவி தொகுப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் விஜய் சேதுபதி.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சமையல் நிகழ்ச்சியில் அவர்தான் தொகுப்பாளராம். அதை வழக்கமான நிகழ்ச்சி போல அல்லாமல் முற்றிலும் பிரம்மாண்டமாக உருவாக்க 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்களாம். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறது டிவி வட்டாரம்.