'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய்யுடன் சந்திரலேகா, ராஜ்கிரணுடன் மாணிக்கம் என சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். கடந்த சில ஆண்டுகளாக மூன்றாவது திருமணம் உள்ளிட்ட சில சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பு நடிகையாக வரும் வரும் அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-1 நிகழ்ச்சியின் வின்னரான பிறகு தற்போது சில புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.
குறிப்பாக, அனல்காற்று என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார், ஹரி நாடார் நடிக்கும் 2கே அழகான காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்திலும் அடுத்து நடிக்கப் போகிறார் வனிதா.
அதாவது, அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் சில புகைப் படங்களை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் பிரசாந்த். அதற்கு கமெண்ட் கொடுத்துள்ள வனிதா விஜயகுமார், படக்குழுவினருடன் இணைய தான் காத்திருப்பதாக பதிவிட்டு, அந்தகன் படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.