ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல். இப்பாடல் பல கிரிக்கெட், சினிமா பிரபலங்களையும் கவர்ந்த ஒரு பாடல். இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது இப்பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார் கிரிக்கெட் வீரர் அஷ்வின்.
இப்போது விஜய்யுடன் 'சச்சின், வேலாயுதம்' படங்களில் ஜோடியாக நடித்த ஜெனிலியா நடனமாக விஜய் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இத்தனைக்கும் ஜெனிலியாவின் இடது கையில் அடிபட்டு அதில் கட்டு கட்டி உள்ளார். அதனுடயே இந்தப் பாடலுக்கு வேகமாக நடனமாடியது விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
“இது உங்களுக்காக விஜய். உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடவும் தான், 'வாத்தி கம்மிங்', எனது பெஸ்ட்டீஸ்களுடன்” என தனது நட்பு வட்டத்தினரையும் அதில் டேக் செய்து இன்ஸ்டாவில் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.