நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ்த் திரையுலகம் ஒரு பெரும் போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் சினிமா உலகத்தில் உள்ள சங்கங்கள் கண்டும் காணாமல் இருக்கின்றன.
கொரோனா பாதிப்புகளுக்குப் பிறகு நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்குத்தான் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். அந்தப் படம் தியேட்டர்களை விட்டு போனதும் மீண்டும் தியேட்டர்கள் காற்றாட ஆரம்பித்துவிட்டன.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சில படங்கள் வெளிவந்தன. ஆனால், அந்தப் படங்களைப் பார்க்கக் கூட யாருமே வரவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம். சென்னையில் உள்ள சில தியேட்டர்கள் பக்கம் நேற்று சென்று வந்த போது அதை நேரில் பார்க்க முடிந்தது.
பகல் காட்சிகளுக்குக் கூட மக்கள் வராமல் தியேட்டர்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இந்த நிலை தேர்தல் வரை இப்படியேதான் இருக்கும் என சில தியேட்டர்களில் சொல்கிறார்கள்.
தேர்தலுக்குப் பிறகு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வருகின்றன. அப்போது மக்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதே சமயம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மக்கள் இன்னும் சில மாதங்களுக்கு தியேட்டர்களை நோக்கி வருவது சந்தேகம்தான் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள்.
திரையுலகில் உள்ள முக்கிய சங்கங்கள் ஒன்று கூட கலந்து பேசி பல சலுகைகளை அறிவித்து மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவைக்க வேண்டும் என சினிமா நலம்விரும்பிகளின் கருத்தாக உள்ளது.