குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நோட்டா, பட்டாஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பஞ்சாப் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. தற்போது எப்-3 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் மெஹ்ரீனுக்கும், பவ்யா பிஷ்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. மணமகன் பவ்யா, அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் ஆவார். மெஹ்ரீனும், பவ்யா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து நிச்சயமாகி உள்ளது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.