திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? |
வசந்தபாலன் இயக்கத்தில் புதுமுகம் மகேஷ், அஞ்சலி மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த படம் 'அங்காடித் தெரு'. சென்னை, தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் ஆண்கள், பெண்களின் நிலை பற்றிய நெகிழ்ச்சியான படமாக அமைந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் அது.
தற்போது ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'ஜெயில்' படத்தை இயக்கி முடித்து அடுத்து அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி நகர், ரங்கநாதன் தெருவுக்குச் சென்றதைப் பற்றி பதிவு ஒன்றை முகப்புத்தகத்தில் நெகிழ்வுடன் வெளியிட்டுள்ளார் வசந்தபாலன்.
''புதிய திரைப்படத்தின் ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக வேறு வழியின்றி 13 ஆண்டுகளுக்கு பிறகு பழைய காதலியைப் பார்க்க செல்வதைப் போல இன்று ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தேன். அரை மணி நேரத்தில் சுடிதார் தைத்து தருகிறோம் என்கிற பெண்களின் குரல் என்னை வரவேற்றது. வீட்டுக்குள் வானம் என்று விற்பனை செய்கிற ராஜாவையும் சமோசா விற்கும் பெரியவரையும் கர்ச்சீப் விற்கும் அப்துலையும் கண்டேன்.
மனம் அங்காடித்தெரு சூட்டிங் நாட்களை புரட்டிப் பார்த்தது. இன்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இளநீர் குடிக்க நான் முகக்கவசத்தை கழட்டும் போது ஓரிருவர் கண்டு கொண்டு ஜெயில் வெளியீடு பற்றி விசாரித்தார்கள். ஒரு ஜவுளிக்கடையில் கதாநாயகிக்கு சுடிதார் வாங்க நின்றபோது மானேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண்களை சகட்டுமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். வசவு சொற்களைக் கேட்க சகிக்காமல் தெருவை விட்டு வெளியே வந்தேன். கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா என்ற அங்காடித்தெரு பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது,” எனப் பதிவிட்டுள்ளார்.
'அங்காடித் தெரு' படம் வந்து பத்து வருடங்களாகியும் அந்த ஜவுளிக்கடைகளில் பெண்களின் நிலை இன்னம் அப்படியே இருக்கிறதென்பதை என்னவென்று சொல்வது?.