நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அவர்வால். கடந்த வருடம் அக்டோபர் மாதம் கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது தமிழில் 'இந்தியன் 2', தெலுங்கில் 'ஆச்சார்யா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல். தமிழில் 'பாரிஸ் பாரிஸ், ஹே சினமாமிகா', தெலுங்கில் 'மோசகல்லு', ஹிந்தியில் 'மும்பை சகா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
அப்படங்களுக்குப் பிறகு அவருக்குப் புதிய பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. திருமணத்திற்குப் பிறகு அவர் கவர்ச்சி காட்டி, கிளாமராக நடிப்பாரா என்ற சந்தேகம் திரையுலகினருக்கு வரலாம். எனவே, தற்போது புதிதாக கவர்ச்சி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் போலிருக்கிறது.
மேலும், முன்பை விட உடல் இளைத்து ஸ்லிம்மாக இருக்கிறார் காஜல். எனவே, அவரைத் தேடி புதிய பட வாய்ப்புகள் வரத்துவங்கும் என்பதில் சந்தேகமில்லை.