பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தற்போது பொன்னியின் செல்வன் என்கிற பிரமாண்ட சரித்திர படத்தை இயக்கி வரும் மணிரத்னம், அதற்கு இடையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக நவரசா என்ற அந்தாலஜி படம் ஒன்றை தயாரிக்கிறார். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை, 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
இதில் வரும் 9 கதைகளை மணிரத்னம், கெளதம் மேனன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன் ராம், ரதீந்திரன், அரவிந்த் சாமி, சித்தார்த் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ரதீந்திரன் படத்தில் சித்தார்த், பார்வதி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் மும்முரமாக இருப்பதால் இந்த படத்தின் பணிகளில் தொய்வு ஏற்படவே பொன்ராம் விலகிவிட்டார். இந்த நிலையில் தற்போது கே.வி.ஆனந்தும் விலகி விட்டார் அவருக்கு பதிலாக சாய்வசந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இயக்கத்தில் அருவி படத்தில் அதிதி பாலன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடக்க இருக்கிறது.