லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சேகர் கம்முலா இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'லவ் ஸ்டோரி'. இப்படத்தின் பவன் இசையமைப்பில் இடம் பெற்றுள்ள 'சாரங்க தரியா' பாடல் கடந்த வாரம் யு டியூபில் வெளியிடப்பட்டது. நாட்டுப்புறப் பாடலாக அமைந்துள்ள இந்தப் பாடலில் சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்து 24 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது.
தற்போது அந்தப் பாடல் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடகி கோமலி என்பவர் தன்னுடைய பாட்டியிடமிருந்து தான் கற்றுக் கொண்ட பாடல் அது, ஆனால் எனக்கு உரிய அங்கீகாரத்தை படக்குழுவினர் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒரு டிவி நிகழ்ச்சியில் பாடிய போது, அதில் நடுவராக இருந்த சுட்டலா அசோக் தேஜா என்பவருக்கு அந்தப் பாடலை எழுதியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடலின் டீசர் வெளியான பிறகுதான் தனக்கு இந்தப் பாடலைப் பற்றிய தெரிய வந்ததாகக் கூறுகிறார். அதன்பிறகு அந்தப் பாடலைப் பாடும் வாய்ப்பையாவது தனக்கு வழங்குமாறு இயக்குனர் சேகர் கம்முலாவிடமும், சுட்டலாவிடமும் கேட்டாராம். ஆனால், ஏற்கெனவே அந்தப் பாடல் முடிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்தாகவும் சொல்கிறார்.
ஆனால், இப்பாடலை எழுதிய சுட்டலாவோ, பல வருடங்களாக இந்த நாட்டுப் புறப் பாடல் பயன்பாட்டில் இருக்கிறது. மற்ற நாட்டுப்புறப் பாடல்களைப் போலவே அதன் டியூனை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால், பாடலில் உள்ள சரணத்தை மாற்றிவிட்டதாகவும் ஒரிஜனல் பாடலிலிருந்து ஒரு சில வரிகளை மட்டுமே பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.