லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிபலமான நடிகையாக உள்ளார் டாப்சி. கடந்த சில தினங்களாக இவர், இயக்குனர் அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட 30 பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார் டாப்சி.
அவர் பதிவிட்டாவது : ''கடந்த "3 நாட்களில் 3 விஷயங்களைத் தேடி தீவிரமான வருமான வரி சோதனை நடந்தது.
1. பாரீஸில் எனக்கு சொந்தமாக பங்களா உள்ளதாம். அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை வரப்போகிறது.
2. என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ப்ரேம் செய்து மாட்டி எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால், அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்தேன்.
3. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகள் என்னிடம் இருக்கின்றன.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.