புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
எஸ்ஜே சூர்யா நடித்து முடித்து கடந்த நான்கைந்து வருடங்களாக முடங்கிக் கிடந்த இரண்டு படங்களில் ஒரு படமான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு இன்று விடிவு காலம் கிடைத்தது. மற்றொரு படமான 'இறவாக்காலம்' படத்திற்கும் அது போல விடிவு காலம் கிடைக்குமா ?.
நயன்தாரா நடித்த 'மாயா', டாப்சி நடித்த 'கேம் ஓவர்' படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கபி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'இறவாக்காலம்'.
இப்படத்தின் டீசர் 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது வரையிலும் படத்தின் வெளியீடு பற்றிய தகவல் இல்லை. 2019ம் ஆண்டு ஒரு பேட்டியில் படத்தின் இயக்குனர் அந்த வருடத்திற்குள் படம் வந்துவிடும் என்றார். ஆனால், இரண்டு வருடங்களாகியும் அது நடக்கவில்லை.
நேற்று 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு ரசிகர் 'இறவாக்காலம்' படத்தின் வருகைக்காக பொறுமையாகக் காத்திருக்கிறேன். எஸ்ஜே சூர்யா, அஷ்வின் சரவணன் ஆகியோரின் மைண்ட் வாய்ஸ் 'டேய் சும்மா இருடா...'' என நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் வசனத்தைச் சேர்த்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு 'இறவாக்காலம்' இயக்குனர் 'நானே நொந்து போயிருக்கேன்' என அந்த ஸ்னீக் பீக்கிலிருந்தே ஒரு வசனத்தை பதிலாக அளித்துள்ளார். மேலும், 'உங்கள் அன்பும், ஆதரவும் தான் எனது நம்பிக்கை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'இறவாக்காலம்' படத்தின் தயாரிப்பாளரான முரளி ராமசாமி தான் தற்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கிறார். அவர் மனது வைத்தால் 'இறவாக்காலம்' படம் வெளிவர வாய்ப்புள்ளது.