அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றி மாறன் -தனுஷ் கூட்டணி இணைந்த நான்கு படங்களுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இந்நிலையில் வட சென்னை படம் வெளியான நேரத்தில் வடசென்னை-2 உருவாகும் என்று தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் மூன்று வருடங்களை கடந்து விட்ட நிலையில் அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. காரணம் தனுஷ், வெற்றிமாறன் இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன், ''வடசென்னை- 2 இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளது. வட சென்னையை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இதன்பிறகே தனுஷின் வடசென்னை-2 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது.