ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் பகவான் படத்தின் போஸ்டரை அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்த பகவான் படம் குறித்த ஒரு அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஆரி. அதில், பகவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் திருவண்ணாமலை அருகே உள்ள செஞ்சிக்கோட்டையில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். கலைஞன் இயக்கும் இந்த படத்திற்கு பிரசன் பாலா இசையமைக்கிறார்.