'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், அடுத்த கட்ட பிரசாரத்தை துவக்க உள்ளார். நாளை மாலை, சென்னை, மயிலை மாங்கொல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். விருப்ப மனு கொடுத்தவர்களிடம், இன்று முதல், நேர்காணல் நடத்தி வரும் கமல், வரும், 7ம் தேதி, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார். இந்நிலையில், காலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இதுகுறித்து, டுவிட்டர் பக்கத்தில் கமல், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். என் மீது மட்டுமின்றி, பிறர் மீதும் அக்கறை உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது, உடல் நோய்க்கு தடுப்பூசி; அடுத்த மாதம், ஊழல் நோய்க்கு தடுப்பூசி... தயாராகி விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
![]() |
கமல் தவிர்த்து ராதிகா, லதா, ஸ்ரீப்ரியா உள்ளிட்ட நடிகைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நடிகை வரலட்சுமியின் தாயாரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
![]() |