2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சமீபத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம்-2 படம் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மூன்றாம் பாகத்தின் க்ளைமாக்ஸை கூட தான் முடிவு செய்துவிட்டதாக கூறியிருந்தார். இந்தநிலையில் த்ரிஷ்யம்-3 குறித்து வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
அவர் கூறியுள்ளதாவது ; “சில வருடங்களுக்கு முன் ஒரு எப் எம் ரேடியோ நிகழ்ச்சியில் பேசும்போது, என்னிடம் கதை சொல்பவர்களுக்காக நான் ஒரு ஈமெயில் ஐடி பயன்படுத்துகிறேன் என கூறியிருந்தேன். தற்போது பலரும் த்ரிஷ்யம்-3க்கான கதை என கூறிக்கொண்டு அந்த மெயில் ஐடியில் கதைகளை அனுப்பி வருகின்றனர். இதனால் எனது மெயில் நிரம்பி வழிகிறது. மேலும் த்ரிஷ்யம்-3க்கான கதையை நானே தான் உருவாக்க போகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் இப்படி கதைகள் அனுப்ப வேண்டாம். காரணம் அவற்றை நான் படிக்க போவதில்லை. மெயிலில் இருந்து அழிக்கத்தான் போகிறேன்” என ஜீத்து கூறியுள்ளார்.