ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்த 'அஞ்சான்' படத்தை எடுத்த இயக்குனர் லிங்குசாமி அந்தப் படத்திற்காக மிகவும் கிண்டலடிக்கப்பட்டார். படமும் படுதோல்வியைத் தழுவியது.
அதன்பின் எப்படியோ சமாளித்து நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கினார். ஆனால், அப்படமும் தோல்வியைத் தழுவியது.
கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கும் லிங்குசாமி அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ள படத்தைத்தான் லிங்குசாமி இயக்கப் போகிறாராம். கதையைக் கேட்ட ராம் நடிக்க சம்மதித்துவிட்டதாகவும் தகவல்.
தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களைத் தயாரித்து அதில் நஷ்டமடைந்த காரணத்தால் லிங்குசாமியின் திரையுலக வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனை வைத்து தயாரித்த 'உத்தம வில்லன்' படம் பெரும் தோல்வியடைந்தது.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்து அவர்கள் தயாரித்து முடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' படமும் இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது.




