Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கு திருப்புமுனையைத் தந்த 'பூவே உனக்காக'

15 பிப், 2021 - 01:42 IST
எழுத்தின் அளவு:
poovae-unakaga-is-turning-point-movie-for-vijay

விக்ரமன் இயக்கத்தில், எஸ்ஏ ராஜ்குமார் இசையமைப்பில், விஜய், சங்கீதா மற்றும் பலர் நடித்து 15 பிப்ரவரி 1996ம் ஆண்டு வெளிவந்த படம் 'பூவே உனக்காக'.

அந்தப் படம்தான் விஜய்யை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் ஒரு நடிகராக மாற்றியது. அதற்கு முன்பு வரை விஜய் நடித்த படங்களை பெண்களும், குடும்பத்தினரும் பார்க்க மாட்டார்கள். அதற்கு முந்தைய விஜய் படங்கள், கொஞ்சம் இரட்டை அர்த்த வசனங்கள், சில ஆபாசக் காட்சிகள் நிறைந்த படமாகத்தான் இருந்தன.


அவரை அப்படியே 'பூவே உனக்காக' படத்தில் மாற்றினார் இயக்குனர் விக்ரமன். சொல்லப் போனால், விஜய் நடித்த படம் ஒன்றை முதன் முதலாக பல ரசிகர்கள் பார்த்தது அந்தப் படமாகத்தான் இருக்கும்.


ஒரு அருமையான இயல்பான காதல் கதையாக வெளிவந்த படம் பெரும் வெற்றியைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர்ஹிட்டாக அமைந்தன.


படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காதலைப் பற்றி விஜய் பேசிய வசனங்கள் இன்றைக்கும் 70ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவையாக இருக்கும்.


'பூவே உனக்காக' படத்திற்குப் பிறகுதான் விஜய் தனக்கான ஒரு இமேஜை உருவாக்கி அதன்பின் அதை இன்னும் வளர்க்கும் விதத்தில் தன்னுடைய படங்களை மாற்றிக் கொண்டார். இன்று தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.


அந்த 'பூவே உனக்காக' படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரதமரிடம் கூட 'வலிமை' அப்டேட் கேட்பீர்களா, அஜித் ரசிகர்களே ?பிரதமரிடம் கூட 'வலிமை' அப்டேட் ... தெலுங்கிற்குப் போகும் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கிற்குப் போகும் இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)